சிங்கப்பூரில் மூன்று பேர் போலி தங்கக் கட்டிகளை விற்று மோசடி!!
போலி தங்கக் கட்டிகள் தொடர்பான மோசடி சம்பவத்தில் மேலும் 2 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவர் மீதும் ஜூலை 17-ஆம் தேதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Shah Fazeez Shahrom(25),Daniel Lim Chin Teck(25) இருவரும் Wilderic Chan Weibin(22) உடன் சேர்ந்து மோசடி செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஜூலை 16-ஆம் தேதி Wilderic Chan Weibin குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று சிங்கப்பூரர்களும் சிராங்கூன் சென்ட்ரலில் கார் பார்க்கிங்கில் பாதிக்கப்பட்டவரிடம் $9,800 மதிப்புள்ள 100 கிராம் தங்கக்கட்டியை விற்பதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரும் தங்கக்கட்டி என நினைத்து பணத்தை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த மோசடி சம்பவம் ஜூலை 10-ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் நடந்துள்ளது.
ஆன்லைன் தளத்தில் போலியான தங்கக் கட்டிகளை வாங்கி ஏமாந்துள்ளதாக ஜூலை 11 மாற்றும் 14 க்கு இடையே குறைந்தது மூன்று புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி விசாரணை நடைபெற்றது.
ஜூலை 15-ஆம் தேதி மோசடி செய்ததாக கூறப்படும் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ரொக்கத்தொகை, ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
Follow us on : click here