இவ்வாண்டின் தீபாவளி வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.தீபாவளி தினத்தன்று “ அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் ஆகிய படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
கண்டிப்பாக போட்டி என்பது இருக்கும். தீபாவளி விடுமுறையை அனுபவிக்க தமிழக அரசு நான்கு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது. தீபாவளி தின விடுமுறை நாட்கள் நான்கு, ரிலீஸ் ஆகவுள்ள படங்கள் மூன்று.
இதனால் ரசிகர்களுக்கு படங்களைப் பார்க்க நேரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அன்றைய தினம் ரிலீஸ் ஆகவுள்ள படங்களின் கதைக்களம் வெவ்வேறு விதமாக இருக்கும். நான்கு நாட்களில் மூன்று நாட்கள் படம் பார்த்து விட்டு மீதமுள்ள ஒரு நாள் ஓய்வு அல்லது ஊருக்கு திரும்புவதற்கு வசதியாக இருக்கும்.