ஆள் மாறாட்ட மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக மூவர் கைது…!!!

ஆள் மாறாட்ட மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக மூவர் கைது...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி நபர்கள் அரசு அதிகாரி போன்று ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் இம்மாத தொடக்கத்தில் நடந்தது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.

மோசடி நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 38,000 வெள்ளியை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றச் சொன்னதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் 26 வயதான மோசடி நபர் அடையாளம் காணப்பட்டு அவர் ஹவ்காங்கில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 40க்கும் மேற்பட்ட செல்போன்கள், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் 60 சிம்கார்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கைதானவர்களில் ஒருவருக்கு 34 வயது, மற்றவருக்கு 36 வயது இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

அவர்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயற்சி செய்ததாகவும் அதற்குள் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் மோசடி நடவடிக்கைகளுக்கு வசதியாக மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகளை சப்ளை செய்ததாக நம்பப்படுகிறது.

அவர்களிடம் இருந்து 5 செல்லிடப்பேசிகள், 4 சிம்கார்டுகள் மற்றும் 30,000 வெள்ளி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.