சிங்கப்பூர் வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முழு விவரமாக தெரிந்துக் கொள்வோம்.
டெஸ்ட் அடுத்து சிங்கப்பூர் வருவது ஒரு சிறந்த வழி. ஆனால் இப்பொழுது இருக்கிற சூழ்நிலையில், டெஸ்ட் அடிக்கும் துறையில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது.ஏனென்றால், சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதற்கான ரூல்ஸ் எதும் மாற்றப்பட போகிறதா? என்ற பல கேள்விகள் இருக்கின்றது.
இதற்கான பதில்கள் அடுத்த 2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வரப்போகிற புதிய மாற்றத்திட்டங்களைப் பொருத்து தான் இக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.
டெஸ்ட் எடுத்தவர்களுக்கு ரிசல்ட் வந்திருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு அது தாமதமாக வருகிறது. ஒரு சிலருக்கு 100 நாட்கள் ஆகியும் ரிசல்ட் வராமல் இருக்கின்றது. இதற்கு முன் ரிசல்ட் வந்ததற்கு பிறகு, அதற்கான கட்டணத்தை செலுத்தி விட்டு சான்றிதழ்கள்(Certificates), ரிசல்ட் பேப்பர் போன்றவற்றை பெற்றுக் கொள்வோம். அதன் பின் ஏஜென்களில் சந்தித்து அவர்கள் மூலம் வெளிநாட்டு கம்பெனி வேலைக்குச் செல்வோம்.ஆனால் தற்பொழுது இருக்கும் சூழ்நிலை, ரிசல்ட் வந்த பிறகு அதற்குரிய ரிசல்ட் பேப்பர்ஸ் Copy தர மறுக்கிறார்கள். அவர்களே கம்பெனி தேடித் தருவதாகவும் கூறுகின்றனர். ஒரு சில இடங்களில் அதற்குரிய பேப்பர்ஸ்களைத் தருகிறார்கள். ஒரு சில இடங்களில் அதைத் தர மறுக்கிறார்கள். அவர்களே கம்பெனியைத் தேர்ந்தெடுத்து கொடுத்தால், கம்பெனியைப் பற்றி விசாரிக்க வேண்டும். விசாரித்த பிறகு வருவது நல்லது.
கம்பெனிகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பற்றி காண்போம். இது மிக முக்கியமான ஒன்று. நீங்கள் தெரிந்தவர்கள் மூலம் அல்லது ஏஜென்ட்கள் மூலம் சிங்கப்பூருக்கு வருவீர்கள்.
இங்கு வந்த பிறகு சம்பளம் குறைவு அல்லது வேறு ஏதும் குறைகள் இருந்தால், யார் மூலமாக வந்தீர்களோ அவர்களிடம் தெரிவித்து வேறு இடத்திற்கு கூட மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு சிலர் Institute மூலம் டெஸ்ட் அடித்து வருவார்கள். சிங்கப்பூருக்கு வந்த பிறகு அவர்கள் கூறிய சம்பளம் கிடைக்கவில்லை. அல்லது மற்ற ஏதேனும் பிரச்சனை இருந்தால் Institute யை அணுகுவோம். ஆனால், institute இதற்குரிய தீர்வைக் கொடுப்பார்களா என்பது கேள்விக்குறியே! Institute ரிசல்ட் பேப்பர்ஸ் தர மறுத்து அவர்களே கம்பெனி தேடி தருவதாக கூறுவார்கள். அப்பொழுதே நீங்கள் எவ்வளவு சம்பளம் வேண்டும்? கம்பெனி விவரம்?எவ்வளவு நேரம் OT வேண்டும்? என்பதைப் பற்றிய அனைத்தையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
கம்பெனி, சம்பளம், வேலைப் பற்றிய விவரம் ஆகியவற்றைத் நன்குத் தெரிந்துக் கொண்ட பிறகு முன்பணம் கட்டுங்கள். உங்களிடம் எல்லாவற்றையும் கூறிய பிறகு தான் முன்பணம் கட்டுவதற்கு ஏற்பாடுச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுங்கள்.
தங்களுக்கு தகுதி உள்ள வேலையைத் தேர்ந்தெடுங்கள். கம்பெனி சம்பளத்தில் ஏதேனும் பிடித்தம்(Deduction) செய்வார்களா என்றும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
பின்னர், சிங்கப்பூர் வந்த பிறகு கம்பெனி வேலை எதிர்பார்த்ததாக அமையவில்லை அல்லது ஏதேனும் பிரச்சனை இருந்தால் Institutes அதற்கான தீர்வை கொடுப்பார்களா என்றும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எதிர்பார்த்த வேலை, சம்பளம் அனைத்தும் அமைந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எடுத்துச் செல்ல சொல்லுங்கள். அடுத்தது, IP papers அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதில் அனைத்து மொழிகளும் இருக்கும். தமிழ் மொழி பேப்பரை நன்குப் படித்து பாருங்கள். அதில் கம்பெனி பெயர், கம்பெனி முகவரி, வேலையின் பெயர், சம்பளம் முறை,OT நேரம் விவரம்,பிடித்தம்(deduction) குறிப்பு போன்ற அனைத்துப் பற்றிய தகவல்களும் தெளிவாக இருக்கும்.அனைத்தையும் சரிபார்த்து விசாரித்த பிறகு, கட்டணத்தைச் செலுத்தி சிங்கப்பூருக்கு வரலாம்.