சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல விரும்புவோர் உஷார்!! இப்படியும் ஏமாற்றுவார்களா?!
சிங்கப்பூரில் பணத்துக்கு ஆசைப் பட்டு போலி நிறுவனங்களை உருவாக்கி சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை வேலைக்கு சேர்த்ததாக 5 சிங்கப்பூரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டவர்களை வேலைக்கு சேர்ப்பதற்கான விண்ணப்பத்தையும் அவர்கள் சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்கள் லாபம் ஈட்டுவதற்காக 13 போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வேலைச் செய்வதற்கு ஆட்களும் தேவையில்லை.
அதனால் சிங்கப்பூர் வந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு முறையான வேலைகள் வழங்கப்படவில்லை.
மேலும் 17 வெளிநாட்டவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
அவர்களில் பலர் சிங்கப்பூரில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வேலை அனுமதி அட்டையை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
17 வெளிநாட்டவர்களில் 10 பேர் தண்டனை பெற்றுள்ளதாக தெரிவித்தது.
இந்த தகவலை மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஐந்து சிங்கப்பூரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
Follow us on : click here