வெளிநாடு போறவங்கள இப்படியெல்லாமா ஏமாத்துறீங்க!!

2025 இல் ஏமாறாமல் எவ்வாறு வெளிநாடு செல்வது என்பதை பற்றி காணலாம்:
வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பலரில் சிலர் நேரடியாக சென்று உள்ளூர் ஏஜென்ட்களிடம் வேலைக்கு முயற்சிக்காமல் ஆன்லைனில் வரும் விளம்பரங்களைப் பார்த்து முயற்சி செய்கிறார்கள்.ஆனால் பலர் மோசடி வலையில் சிக்கியுள்ளனர்.
அனைவரும் போலி ஏஜென்ட்கள் என்று கூற இயலாது.நல்ல ஏஜென்ட்கள் இருப்பது போல போலி ஏஜென்ட்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
எந்தெந்த விஷயங்களில் ஏமாற்றுவார்கள்?
▫️ Fake agent
▫️Instalment
▫️ Medical check up
▫️offer letter
▫️Singapore Insurance
▫️Tourist visa
▫️ Fake agent:
வெளி மாநிலங்களில் இருக்கும் போலியான ஏஜென்ட்கள் உங்களை தொடர்பு கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்பு இருப்பதாக கூறுவார்கள்.அவர்களை தவிர்ப்பது நல்லது.அவர்கள் வலையில் உங்களை சிக்க வைப்பதற்காக நீங்கள் முழுத் தொகையையும் இப்போதே செலுத்த வேண்டாம் நீங்கள் சிங்கப்பூருக்கு சென்ற பின் மீதத் தொகையை செலுத்தலாம் என்று கூறினால் அது உண்மை அல்ல. எந்தவொரு ஏஜென்ட்களும் இவ்வாறு கூற மாட்டார்கள். அப்படி கூறினால் அவர்கள் போலி ஏஜென்ட் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.வெளி மாநிலங்களில் இருந்து வரும் அழைப்புகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
▫️Instalment:
சிங்கப்பூர் செல்வதற்கான கட்டணத்தை மாதத்தவணையாக அங்கு சென்றவுடன் செலுத்தலாம் என்று கூறினால் அது போலி.
▫️ Medical check up
மிகவும் குறைவான கட்டணம் கேட்டாலே அல்லது மாதத் தவணை மூலமாக மெடிக்கல் checkup போடுங்கள் என்று கூறினால் அதுவும் போலியானது.
மெடிக்கல் checkup க்கு 4000 க்கு மேல் கேட்டால் மோசடியாக இருக்கலாம்.
▫️offer letter:
சிங்கப்பூரிலிருந்து ஆஃபர் லெட்டர் வருவது போலவே அங்குள்ள முகவரி, வெப்சைட், நிறுவனத்தின் பெயர் ஆகியவை உள்ளடக்கிய போலியான லெட்டர் தயாரித்து அனுப்புவார்கள்.
அந்த ஆஃபர் லெட்டரில் இருக்கும் வெப்சைட் நேம், இ-மெயில் ஐடி ஆகியவைகளில் கடைசியில் .sg அல்லது .com.sg என்று மட்டுமே இருக்கும்.வேறு மாதிரி இருந்தால் அது போலியானது.
▫️Singapore Insurance:
Mom வெப்சைடில் Insurance கென Application form இருக்கும். மோசடி செய்பவர்கள் அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் டவுட் எடுத்து உங்களிடம் கொடுப்பார்கள்.அதற்கென கட்டணத்தை கட்டுங்கள் என்று உங்களிடம் கூறி ஏமாற்றுகிறார்கள்.இதை கட்டினால் தான் விசா வரும் என்று கூறுவார்கள்.
▫️Tourist visa:
டூரிஸ்ட் விசாவை ஒர்க் பர்மிட் விசா என்று கூறி ஏமாற்றுவார்கள்.
Approval என்று பச்சை நிறத்தில் ஸ்டாம்ப் அடித்து அதில் அவர்களே கையெழுத்திட்டு ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள்.
யாரிடமும் ஏமாறாமல் உங்கள் பணத்தை தொலைக்காமல் வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டுமா? அதற்கான தீர்வு நமது SGTAMILAN….. அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிஸ் வழங்கும் வேலை வாய்ப்பு தகவல்களை நாள்தோறும் www.sgtamilan.com வெப்சைட்டில் பதிவிட்டு வருகிறோம்.உங்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைத்து சிங்கப்பூருக்கு பாதுகாப்பாக சென்று உங்கள் கனவுகளை நிறைவேற்றுங்கள்…. பயன் பெறுங்கள்…..
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan