Latest Tamil News Online

சிங்கப்பூரில் வாடகை வீடுகள் தேடுபவர்களே உஷார்!

சிங்கப்பூர் முழுவதும் 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் வாடகை மோசடி கும்பல் கைதாகினர்.

காவல்துறையில் வாடகை மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 1.3 மில்லியன் வெள்ளி சம்பந்தப்பட்ட வாடகை மோசடியில் கைதாகின 11 பேருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

கைதானவர்களில் 9 பேர் ஆண்கள், மற்றவர்கள் பெண்கள். அவர்களுடைய வயது 18 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.நேற்று காவல்துறை தெரிவித்தது.

வாடகை இடம் தேடுபவர்களிடம் முகவரைப் போல் நடித்து அவர்களிடம் லாவகமாக பேசி நம்ப வைக்கின்றனர். அதன்பின் இடத்தைக் காட்டு முன்னரே அவர்களிடம் இருந்து வாடகைப் பணத்தை வாங்கி ஏமாற்றுகின்றனர்.இதுதான் இந்த மோசடி கும்பலின் வேலையாக செய்து வந்துள்ளது.

மேலும் மூன்று பெண்கள் 21 முதல் 27 வயதுடையவர்கள் மோசடி தொடர்பில் விசாரணைக்கு உதவி வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

ஆரம்பகட்ட விசாரணையில் , மோசடி மூலம் பெறப்பட்ட பணம் 16 பேரின் வங்கி கணக்குகளில் போடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

காவல்துறையில் மொத்தம் 480 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

இதுபோன்ற குற்ற செயல்களுக்கு உடந்தையாக துணை புரிபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரைச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது 500,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.