கோட் படத்தின் ஹிட் பாடலை பாடியது அந்த சூப்பர் சிங்கர் பிரபலமா...?
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். ஏஜிஎஸ் தயாரிப்பிலும், யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் உருவான கோட் திரைப்படத்தில் பிரசாந்த், மோகன்,பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்தை வெங்கட் பிரபு சில ஹைடெக் கான விஷயங்களை பயன்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பாலிவுட் ரேஞ்சுக்கு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவிற்கு சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் 50வது பிறந்த நாளை ஒட்டி கோட் படத்தின் ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார்.
அவருடன் சேர்ந்து மறைந்த பாடகி பவதாரணியின் ஏ ஐ குரல் பாடியது என்ற தகவல் வெளியானது.நீண்ட நாட்களுக்குப் பிறகு பவதாரணியின் குரலை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்று பாடலை கேட்ட ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த பாடலின் ஒரிஜினலை பாடியவர் யார் என்பது யாரும் அறியாத ஒன்று. அந்த கேள்விக்கான பதில் தற்போது ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பாடலை பாடியவர் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட பிரியங்கா என்பது தெரிய வந்துள்ளது.
அவரது குரல் தான் பவதாரணியின் குரலாக ஏ ஐ டெக்னாலஜி மூலம் மாற்றப்பட்டுள்ளதாக யுவன் சங்கர் ராஜாவின் இசைக் குழுவில் ஒருவர் பேட்டி ஒன்றில் தகவலை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவரிடம் பவதாரணி பாடினால் எப்படி இருக்குமோ அதுபோல நீங்கள் பாடி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும்,அவர் அதற்காக பவதாரணியின் பாடலைக் கேட்டு அவரைப் போன்று பயிற்சி எடுத்தாகவும் கூறினார். பிறகு அவரது குரலானது ஏ ஐ மூலம் பவதாரணியின் குரலாக மாற்றியதாக கூறினார்.
Follow us on : click here