இந்த வீரர் தான் இந்தியாவிற்கு பலம்... புகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..
ஐசிசி T20 உலக கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டி ஆனது இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணியளவில் கயானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு மழை பெய்வதற்கான சூழல் இருப்பதாக கூறப்பட்டது.எனினும் மழை பெய்யாமல் போட்டி நடைபெற வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.டாஸில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது மழை பெய்ததால் டாஸ் போடுவதற்கு 1 மணி 20 நிமிடம் தாமானது. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா குறித்து பேசியுள்ளார்.
ரோஹித் சர்மா முந்தைய பேட்டியில் கூறியது போல், ஒரு வீரர் 50 ரன் அல்லது 100 ரன்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை. போட்டி நிலைமைகளின்படி குறைந்த பந்துகளில் அதிக ரன் எடுத்தால் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் T20 போட்டிகளில் நிலைத்து இருக்கலாம். டி20 உலக கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய வீரர்கள் அதே பாணியை பின்பற்றி விளையாடி வருகின்றனர்.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா மட்டும் அரைசதம் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் அனைவரும் குறைந்த பந்துகளில் 30 ரன்களும் 35 ரன்களும் எடுக்க, அந்த ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி 20 ஓவரில் 195 ரன்கள் எடுத்தது. களம் இறங்கும் ஒவ்வொரு வீரரும் சரியாக ஸ்டிரைக் அடித்து விளையாடினால் அதிக ரன்களை எடுக்க முடியும் என்ற ஃபார்முலாவை இந்திய அணி தற்போது பின்பற்றி வருகிறது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா ஒரு முக்கியமான வீரர் என முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து கம்பீர் கூறும்போது, “திறமை மற்றும் உறுதிப்பாடு போன்ற காரணங்களால் ஹர்திக் பாண்டியா இந்தியாவின் மிக முக்கியமான வீரராக மாறியுள்ளார். பேட்ஸ்மேனாக, பந்து வீச்சாளராக, பீல்டராக இந்திய அணியின் முக்கிய வீரராக ஹர்திக் பாண்டியா திகழ்கிறார்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை 10 பந்துகளில் 25 ரன்கள் அல்லது இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் ஆட்டத்தின் நிலையே மாறிவிடும். சர்வதேச தொடர்களில் இந்தியாவுக்காக விளையாடும்போது கண்டிப்பாக அழுத்தம் இருக்கும். அதுவும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் விளையாடும் போது கண்டிப்பாக அழுத்தம் கூடுகிறது.
மேலும் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடும் போது தரமான வீரர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவும் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த ஒரு சிறந்த வீரருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகும் அனைவராலும் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியாது என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
Follow us on : click here