பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்...!!!

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியுடன் வரும் 20ம் தேதி விளையாடுகிறது.
இந்நிலையில் இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் அதிரடியாக விளையாடக்கூடிய இளம் வீரர்களும் அனுபவமிக்க வீரர்களும் கலந்த ஒரு திறமையான அணியாக உள்ளது.
மேலும், காயம் காரணமாக ஓய்வில் உள்ள இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார்.இந்நிலையில், பும்ராவின் இடத்தை நிரப்ப அவரைப் போன்று இறுதிக் கட்டத்தில் சிறப்பாக பந்து வீசும் அர்ஸ்தீப் சிங் தேர்வு செய்யப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் கருத்து:
இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில்,“பும்ராவுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஸ்தீப் சிங்கை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்” என்று நினைப்பதாக கூறியுள்ளார்.ஏனெனில் அவர் டி20 கிரிக்கெட்டில் எவ்வளவு திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும்.நீங்கள் திறமையைப் பற்றி யோசித்தால், இடது கை பந்துவீச்சாளர் நிச்சயமாக புதிய பந்து மற்றும் டெத் ஓவர்களில் நிச்சயமாக சிறப்பாக விளையாட முடியும்.அதைத்தான் இந்திய அணி இந்த இடத்தில் தவறவிட்டது என்று கூறியுள்ளார்.
ஹர்ஷித் ராணாவின் திறமையையும் குறை கூற முடியாது.ஏனென்றால் அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. ஆனால் அவரின் டெத் ஓவர் அணுகுமுறைகள் ஹர்ஷ்தீப் சிங் அளவிற்கு சிறப்பாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் உம்ராவின் இடத்தை நிரப்ப ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக ஹர்ஷ்தீப் சிங் இடம் பெற வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan