இனி இந்த 2 வீரர்களும் T20 பக்கம் வரவே முடியாது..!!! காரணம்..??
ஐபிஎல் தொடர் வருகைக்கு பிறகு இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர். கிரிக்கெட்டில் பலர் சாதித்தாலும் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காத சூழல் உள்ளது.
இதன்மூலம் பல இளம் வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் தற்போது அபிஷேக் சர்மா விளையாடிய அதிரடி ஆட்டத்தால் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
அதிரடி பேட்ஸ்மேன்கள்:
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கில் அறிவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கில், டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே தொடருக்கும் கேப்டனாக இருந்தார்.
ஆனால் இதில் சிறப்பாக விளையாடினாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் கில்லுக்கு டி20 அணியில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால் தற்போது அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்ததால் கில் இனி டி20 கிரிக்கெட் பக்கம் வர முடியாது. ஏற்கனவே சாம்சன், அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் டி20 அணியில் டாப் ஆர்டர் நிலையில் உள்ளனர். இதனால் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைப்பது குறைவு தான்.
மற்றொரு திறமையான வீரர் ருதுராஜ். இவர் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வலம் வந்தவர். தமக்கு கிடைத்த வாய்ப்பை ருதுராஜ் அற்புதமாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் இந்திய ஒருநாள் அணியில் ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. டெஸ்ட் அணியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவருக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாட மட்டுமே இடம் கிடைத்தது.
தற்போது அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி வருவதால் ருதுராஜுக்கு இனி வாய்ப்பு கிடைக்காது.இந்திய அணியில் தற்போது சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூரியகுமார், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் போன்ற வீரர்கள் மேல் வரிசையில் இருப்பதால், அவர்களைத் தாண்டி கில், ருத்ராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.
ஒருவேளை சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக இசான் கிஷன் அல்லது ரிஷப் பண்டு ஆகியோர் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan