சிங்கப்பூரில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்கு அதிகமாக வேலை வாய்ப்பு வரவுள்ளது!!
சிங்கப்பூர்: உலகெங்கிலும் உள்ள உணவு பிரியர்கள் சுவையான உணவை ருசிப்பதற்காக கடல் தாண்டிச் செல்லக் கூட தயங்க மாட்டார்கள்.
அந்த வகையில் உணவகங்களில் சமைக்கும் சில சமையல்காரர்களின் ருசிக்கு அடிமையாகி அதே கடையை மீண்டும் மீண்டும் தேடிச்சென்று உணவு வாங்குபவர்களும் உண்டு.
சிங்கப்பூரில் வெளிநாட்டு சமையல்காரர்கள் சமையலில் கைதேர்ந்தவர்களாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டத்தால் இந்திய உணவகங்கள் பயனடைந்துள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக பண்டிகை காலங்களில் விற்பனை அமோக வரவேற்பை பெற்றது.
பணி அனுமதி அட்டையில் இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சமையல் நிபுணர்களை சேர்க்கும் திட்டம் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது.
சுவையான பாரம்பரிய இந்திய உணவுகளை தயாரிப்பதற்கான வேலையாட்கள் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை.
ஒவ்வொரு உணவு வகையிலும் அனுபவமும் திறமையும் உள்ளவர்களைத் தேட வேண்டும் என்று இந்திய உணவகங்கள் கூறுகின்றன.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஏராளமான பணியாளர்கள் தேவைப்படுவதாக உணவகங்கள் கூறுகின்றன.
அதிக சமையல்காரர்கள் கையில் இருப்பது வசதியாக இருப்பதாக உணவகங்கள் தெரிவித்தன.
இதனால் உணவகங்களில் வெளிநாட்டு சமையல்காரர்களின் தேவை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0