“முழுமை தற்காப்பு பயிற்சியில் வழங்கப்பட்ட உணவில் எந்த பிரச்சனையும் இல்லை”- சுகாதார அமைச்சகம்

“முழுமை தற்காப்பு பயிற்சியில் வழங்கப்பட்ட உணவில் எந்த பிரச்சனையும் இல்லை”- சுகாதார அமைச்சகம்

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் முழுமைத் தற்காப்புப் பயிற்சியின்போது  சிலருக்கு திடீரென வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்த Exercise SG Ready பயிற்சியின் போது உணவு வழங்கப்பட்டது.

SOTA கலைப்பள்ளியைச் சேர்ந்த 187 மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர்.

இதில் உணவை சாப்பிட்டவர்களில் பூஜ்ஜிய புள்ளி இரண்டு சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வயிற்றுக் கோளாறு சம்பவங்களுக்கும், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிங்கப்பூர் உணவு ஆணையமும் சுகாதார அமைச்சகமும் தெரிவித்துள்ளன.

உணவுப் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குக் கோளாறு சம்பவத்திற்கும் முன்பே தயாரிக்கப்பட்ட உணவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.