பிப்ரவரி 6,7-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பொது வீடமைப்பு குறித்து விவாதங்கள் நடைபெற்றது.இதைப் பற்றி பிரதமர் Lee Hsien Loong அவருடைய முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.இது சிங்கப்பூரர்களுக்கு மிக நெருக்கமானது என்று கூறினார்.
கிருமி பரவல் காலக்கட்டத்தில் வீடுகளின் விற்பனையைப் பெரிதாக பாதித்தது.வீடுகளுக்காக காத்திருக்கும் காலமும் அதிகரித்து இருந்தது.அதேபோல் மறுவிற்பனை வீடுகளின் விலையும் உயர்ந்தது.
சிங்கப்பூரர்களுக்கு வீடுகளுக்காகக் காத்திருப்பது,கட்டுப்படியான விலையில் கிடைக்குமா என்பது போன்ற கவலைகள், பதற்றங்கள் காரணமாக இருக்கிறதாக கூறினார்.
இந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும், மற்ற அமைச்சர்களும் விளக்கம் அளித்ததாக கூறினார்.
இந்த பிரச்சனையைத் தீர்க்க அரசாங்கம் முழு ஈடுபாட்டுடன் கடுமையாக செயல்பட்டு வருகிறது.அதனைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
சிங்கப்பூரர்கள் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தனக்கென சொந்த வீடு இல்லாமல் இருக்கும் சூழ்நிலை வராது என்று உறுதியுடன் கூறினார்.
இந்த வாக்குறுதியை இனி வரும் தலைமுறைகளுக்கு அளிப்பதாக பிரதமர் Lee Hsien Loong கூறினார்.