சிங்கப்பூர் சாலைகளில் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் அதிகம்!

இப்போது சிங்கப்பூர் சாலைகளில் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக காணப்படுகிறது.

அந்த எண்ணிக்கையைக் கடந்த ஓராண்டுடன் ஒப்பிடுகையில் 20 மடங்குக்குமேல் அதிகரித்துள்ளன.இது பசுமையை நோக்கிய பயணமாக இருந்தாலும் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

அதனை வாங்க வைப்பது பெரிய சவால் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மக்களுக்கு இதில் ஆர்வம் இருந்தாலும் அதனை வாங்கவைக்க வைப்பது பெரிய சவால்.

இதற்குக் காரணம் அதனின் விலை. இவற்றின் விலை சுமார் 50 விழுக்காடு அதிகம்.மற்ற மோட்டார்சைக்கிள்களை விட இதன் விலை அதிகம்.

மின்கலன்களைத் தனியாக எடுத்துச்சென்று அதனை வீட்டில் மின்னூட்டம் செய்ய முடியாது.தற்போது இருக்கும் மின்னூட்ட வசதிகள் கார்களுக்கானது.

இதனைச் சரி செய்வதற்காக ஒரு புதிய நிறுவனம் மின்கலன்களை மாற்றி மாற்றி பயன்படுத்தக்கூடிய முறையைச் சோதித்து வருகிறது.அதனைக் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.ஆனால், இதற்கு சரியான நடைமுறை தேவைப்படுகிறது.

சிங்கப்பூர் 2040-ஆம் ஆண்டிற்குள் படிம எரிபொருளின் அகற்ற திட்டமிட்டு வருகிறது.

இதனைப் பரவலாக பயன்படுத்த எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.