சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கலைக்கட்டும் தீமிதித் திருவிழா…!!!

சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கலைக்கட்டும் தீமிதித் திருவிழா...!!!

சிங்கப்பூர்:செளத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா இன்று (அக்டோபர் 20) மாலை 6 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

திருவிழாவின் தொடக்க விழாவான கொடியேற்றம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்றது.

தீமிதி விழா தொடர்பான நிகழ்ச்சிகள் 3 மாதங்கள் நடைபெறும்.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டுதோறும் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதில் இந்தியர்கள் மட்டுமின்றி பிற இனத்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

தீமிதி பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு 4 கிலோமீட்டர்கள் நடந்து செல்கின்றனர்.

பூக்குழி இன்று காலை 8 மணி முதல் தயாராகி வருவதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 5ம் தேதி முதல் பக்தர்கள் பால்குடம், அங்கப்பிரதட்சணம்,கும்பிடுதண்டம் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

திடீரென மழை வந்துவிட்டால் கூட தீமிதி திருவிழாவில் எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தன்னார்வலர்கள் தீமிதி விழா சிறப்பாக நடைபெற உதவுகிறார்கள்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக ஊடகங்களில் தீமிதி விழா நேரடியாக ஒளிபரப்பப்படும்.