சிங்கப்பூர் காவல்துறைக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 7 மணியளவில் கடை ஒன்றில் போலி துப்பாக்கியைக் கொண்டு ஊழியர்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர்.
16 வயதுடைய இரண்டு இளைஞர்கள் யீஷினில் உள்ள கடை ஒன்றில் அவர்கள் போலி துப்பாக்கியை வைத்து அங்கு பணிபுரியும் ஊழியரை மிரட்டி உள்ளனர்.
அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்தது.
பணத்தைக் காசாளரிடம் செலுத்த இரு இளைஞர்களில் ஒருவர் சென்றார். அப்பொழுது,போலித் துப்பாக்கியை அவரை நோக்கி காட்டி நீட்டியதாக காவல்துறை கூறியது.
இன்னொருவர் சம்பவத்தைக் வீடியோ பதிவு செய்தார்.
துப்பாக்கியைக் கண்ட காசாளர் உடனே பதரி அலறினார்.அதன்பின் இருவரும் சிரித்துக்கொண்டே இது போலியான துப்பாக்கி என சொன்னார்கள்.
அந்த இரு இளைஞர்களும் கடை ஊழியர்களை வேடிக்கையாக அச்சுறுத்த திட்டமிட்டதாக தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவருடைய அடையாளமும் cctv கேமரா மூலம் கண்டறியப்பட்டது. அதன்பின்,3 மணி நேரத்துக்குள் அவர்களை காவல்துறை கைது செய்தது.
இது போன்ற குற்றங்களுக்கு பத்தாண்டு வரை சிறைத்தண்டனையும்,அபராதமும் விதிக்கப்படலாம்.
இத்தகைய தேவையற்ற அச்சுறுத்தலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் இது போன்ற நடவடிக்கைகளைக் காவல்துறை ஒரு போதும் அதனை சகித்துக் கொள்ளாது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.