உலக பட்டத்தை மீண்டும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இளம் சிங்கப்பூர் வீரர்!! யார் அவர்?

உலக பட்டத்தை மீண்டும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இளம் சிங்கப்பூர் வீரர்!! யார் அவர்?

சிங்கப்பூரில் 17 வயதுடைய Maximilian Maeder இவ்வாண்டு(2024) ஃபார்முலா கைட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றிப் பெற்றதையடுத்து தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இத்தாலியின் நம்பர் 1 Riccardo Pianosi, ஆஸ்திரியாவின் Valentine Bontus மற்றும் பிரான்சின் Axel Mazzella ஆகியோரை பிரான்சின் ஹை ரேலில் தோற்கடித்து தங்கம் வென்றார்.

இவர் இறுதிப் போட்டிக்கு செல்ல முதல் தொடரில் தனது சிறப்பான வெற்றியை நிலை நாட்டியதால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

மூன்று வெற்றிகளை பெற்ற முதல் போட்டியிலேயே தங்கத்தை வென்றார். நான்கில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தனது பட்டத்தை தக்க வைத்துகொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.

இறுதிப் போட்டியில் தனது வெற்றியை நிலைநாட்டி பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

தற்போது உலக தரவரிசைப் பட்டியலில் அவர் நான்காவது இடத்தில் உள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு முதல் தனது அதிரடியான ஆட்டத்தை செயலில் காட்டி வருகிறார்.

மேடர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வென்று Formula Kite European Championship – இல் இளம் வீரர் என்ற பெருமையைச் சேர்த்துள்ளார்.