வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உருவாகியுள்ள அற்புதம்!!

வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உருவாகியுள்ள அற்புதம்!!

சிங்கப்பூர் வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் முதல்முறையாக சமூக நகர்ப்புற பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பண்ணைக்கு City Sprouts @ West Coast என பெயரிடப்பட்டுள்ளது.

இங்கு சிங்கப்பூர் தாவர செடி வகைகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் செடி வளர்ப்பை பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் செடி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செடியினை வாடகைக்கு எடுத்து வளர்க்கும் வகையில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் NParks’s Social Enterprise Community Urban Farm (Secuf) அமைப்பானது சிட்டி ஸ்ப்ரூட்ஸ் நிறுவனத்திற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கால்பந்து மைதானத்தின் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு பண்ணை உருவானது.

சிட்டி ஸ்ப்ரூட்ஸின் சமூகப் பணியானது, சிங்கப்பூரில் உள்ள பயன்படுத்தப்படாத இடங்களை சமூகப் பண்ணைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதியோர்கள், சிறப்பு குழந்தைகள், முன்னாள் குற்றவாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.