கோவில் பணத்தை தனது சுயநலத்திற்காக பயன்படுத்திய பெண்!!

கோவில் பணத்தை தனது சுயநலத்திற்காக பயன்படுத்திய பெண்!!

சிங்கப்பூர்: ஜூலை 25 ஆம் தேதி 44 வயதான பெண் ஊழியர் நம்பிக்கையை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றஞ்சாட்டை ஒப்புக்கொண்டார்.

டோ பயோ சியூ டெக் சீன் டோங் கோவிலில் பணிபுரிந்து வந்தார்.

தாம் லாய் யிங் கோவிலில் பணத்தை எடுத்து மளிகைப் பொருட்கள் வாங்கவும், உணவகங்களில் தினமும் உணவு சாப்பிடுவதற்கும் பயன்படுத்தியுள்ளார்.அவர் 2022 பிப்ரவரி மாதம் கோவிலில் வேலைக்கு சேர்ந்தார்.

அவருடைய மாத சம்பளம் $1600 வெள்ளி.

இவர் பொதுமக்களிடமிருந்து தொண்டு மற்றும் உறுப்பினர் கட்டணங்களுக்காக நன்கொடைகளை வசூலிக்கும் பொறுப்பில் இருந்தார்.

கோவில் நிதி நிர்வாகியிடம் ரசீது புத்தகத்தையும், பணத்தையும் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர் வேலைக்குச் சேர்ந்த ஒரு மாதத்தில் முறைகேடாக பணத்தை பயன்படுத்தினார் என்பது தெரிய வந்துள்ளது.

அவர் வசூலித்த மொத்தத் தொகை $38799. இதில் நன்கொடையாக $37799, உறுப்பினர் கட்டணம் $1000.வசூலித்த தொகையை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தினார்.அவரின் முறைகேடான செயல் தெரிய வந்தவுடன் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

தான் செய்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

Follow us on : click here ⬇️