அக்டோபர் 31ஆம் தேதி அன்று பாரிஸில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ஒரு இஸ்லாமிய பெண் தாக்குதல் மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் தெரிந்த உடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அந்தப் பெண் தான் ஒரு மனித வெடிகுண்டு என்றும், தன்னைத்தானே வெடிக்கச் செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
காவல்துறையினர் அந்தப் பெண்ணை நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் படியும், அமைதியாக இருக்கும் படியும் உத்தரவிட்டனர்.
ஆனால் அந்தப் பெண் காவல்துறையினரின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அவர்களை மிரட்டினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, வேறு வழியின்றி அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் அந்தப் பெண்ணிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
இச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து, பாரிஸில் இதுபோன்ற தாக்குதல் மிரட்டல்கள் அதிகரித்து வருவதால், காவல்துறையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.