2021-ஆம் ஆண்டில் தஞ்சோங் பாகார் வட்டாரத்தில் BMW காரை அதிவேகமாக ஓட்டியதால் விபத்து நேர்ந்ததிருந்தது.
கார் விபத்தை ஏற்படுத்தியதில் Phoo Yi Lin என்பவரும் ஒருவர்.Phoo Yin Lin மலேசியா நாட்டைச் சேர்ந்தவர். வயது 26.
நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அவருக்கு 5000 வெள்ளி அபராதமும், மூன்று ஆண்டு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.
விபத்து ஏற்படுத்தியவர்கள் தஞ்சோங் பாகார் வட்டாரத்தைச் சுற்றிக் காரை ஓட்டிக் கொண்டிருந்துள்ளனர்.
கடைசியாக ஜொனத்தன் லாங் என்ற கார் உரிமையாளர் மது போதையில் வேக வரம்பையும் மீறி ஓட்டியுள்ளார்.
இதனால் கார் அதன் கட்டுப்பாட்டை இழந்து கடை வீட்டின் அருகில் மோதியது. அதன்பின் தீப்பற்றி எரிந்தது.
இந்த தகவலானது இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்தது.
இதில் லாங் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் உடற்கூறு ஆய்வில் ஐந்து பேருமே கடுமையான தீக்காயங்களால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.