ராங்கியம் ஊராட்சி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை!!

ராங்கியம் ஊராட்சி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை!!

திருமயம் ஊராட்சி ஒன்றியம் ராங்கியம் ஊராட்சி அலுவலகத்திற்கு செயலாளர் ஒருவரை நிரந்தரமாக நியமிக்க கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 6 மாதமாக இங்கு செயலாளர் பணியிடம் காலியாக உள்ளது. திருமயம் ஊராட்சி செயலர் இங்கே கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவசரத்திற்கு வரி கட்ட முடியவில்லை. இலவச வீடு திட்ட பயனாளிகளுக்கு குறித்த காலத்தில் நிதி கிடைக்க வில்லை. அரசின் திட்டப்பணிகளை கண்காணிக்க ஊராட்சி தலைவருக்கு உதவியாக அலுவலர் கிடையாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் சரியாக வழங்க வில்லை. ஊராட்சியின் கூட்ட நடவடிக்கைகளை எழுதக்கூட ஆள் இல்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஆற்றல் மிக்க ஊராட்சித்தலைவர் இருந்தும் நிரந்தரமான செயலாளர் இல்லாததால் வளர்ச்சி,நிர்வாகப்பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே ராங்கியம் ஊராட்சிக்கு விரைவில் நிரந்தரமாக செயலாளரை நியமிக்க கலெக்டர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு ராங்கியம் ,மெட்டு கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.