
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் உள்ள செங்டூ பனி கிராமம் சுற்றுலா பயணிகளை போலி பனியை பயன்படுத்தி ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்த கிராமம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது.பருத்திப் பஞ்சை பயன்படுத்தி உண்மையான பனி போன்ற தோற்றத்தை சித்தரித்துள்ளது.
இது குறித்து சுற்றுலா பயணிகள் இணையத்தில் பதிவிட்ட கருத்துகள் தற்போது அதிகம் பகிரிடப்பட்டு வருகிறது.
சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கிராமத்தில் வானிலை சூடாக இருப்பதாகவும், அங்கு பனி படரவில்லை என்றும் கிராமத்தின் அதிகாரப்பூர்வ wechat கணக்கில் பதிவிடப்பட்டது.
காலநிலை மாற்றம் காரணமாக, சீனா நீண்ட காலமாக கடுமையான வெப்பம் அல்லது தொடர்ச்சியான கனமழையை அனுபவித்து வருகிறது.
கிராமத்தில் பனி இருப்பதாக சுற்றுலாப் பயணிகளை நம்ப வைக்க பருத்திப் பஞ்சு பயன்படுத்தப்பட்டது.ஆனால் சுற்றுலா பயணிகள் அதை கண்டுபிடித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கிராமம் போலி பனியை அகற்றியது. இப்போது சுற்றுலாத்தலம் மூடப்பட்டுள்ளது.
2 சுற்றுலா பயணிகளிடம் கிராமத்தினர் மன்னிப்பு கேட்டதுடன், அவர்களது பணம் திருப்பி தரப்படுவதாக உறுதியளித்துள்ளனர்.