“சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ பொய்”-அமைச்சர் ஜோசஃபின் தியோ
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மின்சாரத்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ தான் மலாய் முஸ்லிம்களை அவதூறாக பேசியதாக வெளிவந்த காணொளி பொய்யானது என விளக்கமளித்துள்ளார்.
இதனை அவர் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
டிக்டாக் பயனர் ஒருவர் அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளதாக கூறினார்.
தகவல் வெளியிட்ட நபர் குறித்த அடையாளத்தை வெளியிட்டால் பொய்யான காணொளி மேலும் பரவ வாய்ப்புள்ளதாக கூறினார்.
இந்த போலி வீடியோ குறித்த தகவலை தனது நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டதாக கூறினார்.
ஆனால் வீடியோவைப் பார்த்த நேரத்தில்,டிக்டாக் பயனர் முந்தைய வீடியோவுக்குப் பதிலாக மன்னிப்பு வீடியோவைப் பதிவேற்றியுள்ளார்.
போலியான செய்தியாக இருக்கலாம் என அந்த நபர் வெளியிட்ட மன்னிப்பு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியான போதிலும், தவறான தகவல்கள் அடங்கிய முதல் வீடியோ டிக்டாக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது என்று அமைச்சர் தியோ கூறினார்.
இதுபோன்ற வீடியோக்களின் நம்பகத்தன்மையை முதலில் சரிபார்த்த பிறகு அவற்றைப் பகிருமாறு நெட்டிசன்களை அவர் கேட்டுக் கொண்டார்.
Follow us on : click here