ஓய்வை அறிவித்தார் மூத்த கோல்கீப்பர்திரு.ஹாசன் சன்னி…!!!

ஓய்வை அறிவித்தார் மூத்த கோல்கீப்பர் திரு.ஹாசன் சன்னி...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த கோல்கீப்பர் திரு ஹாசன் சன்னி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2004 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஹாசன், ஜூன் மாதம் தான் ஓய்வு பெற இன்னும் சில வருடங்கள் இருப்பதாக கூறியிருந்தார்.இவர் 20 ஆண்டுகளாக கோல்கீப்பராக இருந்துள்ளார்.

ஹாசன் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், “நான் ஒருபோதும் என்னை சிறந்தவன் என்று நினைத்ததில்லை, ஆனால் என் வழியில் நான் தொடர்ந்து போராடினேன்,பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் 100 சதவீதத்தை அளித்தேன்” என்று கூறினார்.

இளம் விளையாட்டாளர்களுக்கு வழிவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூருடனான அவரது கால்பந்து பயணம் பல ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருந்ததாகவும், ஆனால் அதை ஒவ்வொரு கணமும் நேசித்ததாகவும் திரு.சன்னி கூறினார்.

ஒவ்வொரு முறையும் நாட்டைப் பிரதிநிதித்து விளையாடியது தமக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறினார்.

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தாய்லாந்திடம் 3-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வியடைந்தது.

அந்த போட்டியில் திரு.சன்னியின் சிறப்பான ஆட்டத்தை சீன கால்பந்து ரசிகர்கள் பாராட்டினர்.

மேலும் அவர் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து கோல்கீப்பிங் அணிக்கு ஆதரவு வழங்குவதாக கூறினார்.

எதிர்வரும் போட்டிகளில் சிங்கப்பூர் தேசிய அணி சிறந்து விளையாடவும், எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வேண்டும் எனவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Follow us on : click here ⬇️