ஆஸ்திரேலியாவின் அடிலேய்ட் நகரில் வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதியினர் வீட்டின் அழையா விருந்தாளியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு, படுக்கையறைக்கு உறங்கச் சென்றபோது கோலா விலங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.படுக்கையில் நின்றிருந்த தம்பதிகளை கவனிக்காமல் அது படுக்கையறையில் உள்ள மேஜை மீது ஏறியது.
பின்னர் அது தம்பதிகளின் படுக்கையில் குதித்தது.திருமதி பிரான் டியாஸ் ரூஃபினோ கூச்சலிட்டார்.ரூஃபினோ தம்பதியினருக்கு இந்த விலங்கு எப்படி நுழைந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது.
அவரது கணவர் கோலாவை வீட்டை விட்டு துரத்த முயன்றார். கோலா அங்கும் இங்கும் ஓடியது.கணவர் கோலாவை ஒரு போர்வையின் உதவியால் வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றார்.
செல்லப் பிராணிகளுக்கான வீட்டு கதவு வழியாக கோலா வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என்று தம்பதியினர் சந்தேகிக்கின்றனர்.
அக்கம்பக்கத்தில் இதேபோன்று பல கோலாக்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.