அடிதடியுடன் அமர்க்களமாக ஆரம்பிக்கும் பழங்குடி மக்களின் புத்தாண்டு!!
பெருவில் வசிக்கும் பழங்குடியினர் புத்தாண்டு தொடங்குவதற்கு முன் ஒரு வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் வெறுப்புணர்வை விட்டுவிடுவதே சிறந்த தீர்வு என்பது அவர்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
இது அங்குள்ள மக்களால் டக்கனாக்குவீ திருவிழா என்ற பெயரால் கொண்டாடப்படுகிறது.
இது பெருவின் சும்பிவில்காஸ் பகுதியில் உள்ளது.
டக்கனாக்குவீ என்றால் பழங்குடியினர் மொழியில் அடிதடி என்று கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று தொடங்கும் இந்த திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறும்.
இந்த செல்ல சண்டை மூலம் பழங்குடி மக்கள் ஒருவருக்கொருவர் கோபத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.
அன்புக்குரியவர்கள் மீதான வருத்தம் நீங்கி முன்பை விட நெருக்கமாக பழக முடியும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.
அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அடிதடியில் இறங்குவதால் மிகவும் கவனமாகவே நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இதில் கடுமையான காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
இம்முறை இந்த நிகழ்வில் பெண்களும் குழந்தைகளும் கூட கலந்து கொண்டனர்.
Follow us on : click here