சிங்கப்பூரில் பிறர் அணிந்த ஆடைகளை வாங்கும் போக்கு அதிகரிப்பு..!!

சிங்கப்பூரில் பிறர் அணிந்த ஆடைகளை வாங்கும் போக்கு அதிகரிப்பு..!!

சிங்கப்பூர்:மக்கள் தற்போது பிறர் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அணிவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிறர் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன.

மற்றவர்கள் அணிந்த ஆடைகளை வாங்கி அணிவது சிலரை முகம் சுளிக்க வைக்கும்.

ஆனால் இப்போது அந்தப் போக்கு மாறி வருவதாகத் தெரிகிறது.

நோன்பு போன்ற பண்டிகைக் காலங்களில் பிறர் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அணிவது இப்போது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது.

புதிய ஆடைகளை விட விலை மலிவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது உள்ளிட்ட பல காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் அத்தகைய ஆடைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

குறைந்த விலையில் கைநிறைய பொருட்களை வாங்கும் போக்கு, வயது வித்தியாசமின்றி அனைவரையும் ஈர்த்து வருகிறது.