நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!!

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு...!!!

சித்தார்த், நயன்தாரா மற்றும் மாதவன் நடித்துள்ள ‘டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக வெளியான டெஸ்ட் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படக்குழுவினர் ஒரு கதாபாத்திர அறிமுக வீடியோவையும் வெளியிட்டனர். இந்தப் படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்.நயன்தாரா மாதவனின் மனைவி குமுதாவாக நடிக்கிறார்.

‘விக்ரம் வேதா’, ‘மண்டேலா’, ‘இறுதிச்சுற்று’ போன்ற படங்களைத் தயாரித்த ஓய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி, தயாரித்த படம் தான் ‘டெஸ்ட்’.

டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டது.இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சித்தார்த், மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்பு ஆய்த எழுத்து மற்றும் ரங் தே பசந்தி படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த படம் ஏப்ரல் 4 ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் OTT-யில் வெளியாக உள்ளது.

Exit mobile version