சிங்கப்பூரில் நச்சு வாயு தாக்கப்பட்டு உயிரிழந்த இந்தியா ஊழியரின் சோகக்கதை!!

சிங்கப்பூரில் நச்சு வாயு தாக்கப்பட்டு உயிரிழந்த இந்தியா ஊழியரின் சோகக்கதை!!

சிங்கப்பூர் தேசிய நீர் நிறுவனமான PUB இன் சோவா சூ காங் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் சுத்தம் செய்யும் போது நச்சுப் புகையை சுவாசித்ததால் இந்தியாவைச் சேர்ந்த சீனிவாசன் சிவராமன்(40) உயிரிழந்தார். இந்த சம்பவம் மே 23-ஆம் தேதி நேர்ந்தது.

இறந்த இந்தியா ஊழியரின் குடும்பம் அவர்களின் கோடை விடுமுறைக்காக சிங்கப்பூரில் இருந்தனர்.

அவருடைய மனைவி நர்மதா மற்றும் இரு மகள்களும் சிங்கப்பூரில் இருந்தனர்.

மேலும் சிங்கப்பூரில் நர்மதா சகோதரர் நவீன் குமார் உடன் சேர்ந்து குடும்பமாக தங்கி இருந்தனர்.

மே 27-ஆம் தேதி மலேசியா செல்வதற்கு முன்பு ஒரு மாதம் இங்கே தங்குவதாக திட்டமிட்டிருந்தனர்.

மே 23-ஆம் தேதி அன்று அவர் இறந்த செய்தியை கேட்டவுடன் மறுநாளே அவர்களின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு திரும்பினர்.

விமான நிலையத்தில் அவரின் இரு மகள்கள் அப்பா எங்கே? ஏன் அப்பா வரவில்லை? என கேள்வி கேட்டனர். அவர்களிடம் எப்படி கூறுவது இனி, உங்கள் தந்தையை பார்க்க இயலாது, அவர்களிடம் உண்மையை கூற தவிப்பதாகவும் நர்மதாவின் சகோதரர் கூறினார்.

தனது கணவர் இறந்த செய்தியை கேட்டவுடன் மனைவி நர்மதா மன உளைச்சலுக்கு ஆளானதாக நர்மதாவின் சகோதரர் கூறினார்.

மே 26-ஆம் தேதி அவரது உடலை குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களிடம் கொடுக்கப்பட்டது.

இறுதி சடங்குகளுக்காக அவரது உடல் மே 28-ஆம் தேதி இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது.

இந்த தகவல் முதலில் தமிழ் முரசுவில் வெளிவந்தது.