குடிபோதையில் ஜன்னலை கதவென்று நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!!

குடிபோதையில் ஜன்னலை கதவென்று நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்...!!!

தைவானின் நியூ தைப்பெய் சிட்டியில் குடிபோதையில் இருந்த 19 வயது பெண் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் ஜன்னலை கதவு என்று தவறாக நினைத்து நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் கீழே விழும் முன் பந்தல் ஒன்றின் மீது விழுந்துள்ளார்.

இதனால், அவருக்கு வயிற்றுப் பகுதியில் மட்டும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது.

சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தனது கவனக்குறைவால் இந்தச் சம்பவம் நடந்ததாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.