அமெரிக்காவை சேர்ந்த Susan Hodgson என்ற பெண்மணி விடுமுறை பயணத்தை முடித்துவிட்டு தென்மேற்கு அட்லாண்டாவில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு திரும்பிய போது அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
சுமார் 15 ஆண்டுகளாக வீடு இருந்த இடத்தில் வெறும் இடிபாடுகளைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
சூசனின் பக்கத்து வீட்டுக்காரர் அவரைத் தொடர்பு கொண்டு,வீட்டை இடிப்பதற்கு யாரிடமாவது கூறி உள்ளீர்களா என்று கேட்டார்.அப்படி யாரையும் வேலைக்கு அமர்த்தவில்லை என்று சூசன் கூறினார்.
உடனே சூசன் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று என்ன நடக்கிறது என்பதை பார்த்து வருமாறு கூறியுள்ளார்.
அவர் நேரில் சென்று விசாரித்த போது தான் அந்த ஊழியர்கள் வேறொரு வீட்டிற்கு பதிலாக சூசனின் வீட்டை தவறுதலாக இடித்தது தெரியவந்தது.
இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு அதனை அவர்கள் சரி செய்து தர வேண்டும் என்று சூசன் கூறினார்.
இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக நிறுவனம் கூறியது. இந்த சிக்கலை தீர்க்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியது.