சிங்கப்பூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஒருவர் இளம்பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 15 வயது,14 வயது சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக செயல்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 34 வயதுடைய கென்னத் சியா அவரது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள ஜூலை 12 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கும் போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டார். கல்வி அமைச்சு (MOE) அவரை இடைநீக்கம் செய்துள்ளது. அவர்மீது ஐந்து குற்றச்சாட்டுகள் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2 அன்று ஹவுசிங் போர்டு (HDB) பிளாக் படிக்கட்டில் 15 வயது சிறுமியை பாலியல்ரீதியாக ஈடுபட்டுள்ளார் என்பதும் குற்றச்சாட்டுகளில் அடங்கும். அடுத்த மாதம், அவர் அதே செயலை மற்றொரு 15 வயது சிறுமியிடம் மீண்டும் செய்ததாகக் கூறப்படுகிறது. மே மாதம் 13 வயது சிறுமியின் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சியா மீது குற்றம் சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க நீதிமன்றம் ஒரு gag உத்தரவை விதித்துள்ள நிலையில், சியாவின் அடையாளம் தொடர்பாக அத்தகைய உத்தரவு எதுவும் இல்லை. CNA இன் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, MOE செய்தித் தொடர்பாளர், இந்த மாதத்திலிருந்தே (ஜூலை) சியா தனது பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கல்வி அமைச்சகம் கூறியது. ஊழியர்களின் தவறான நடத்தையை MOE தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றும், தேவையான நடத்தை மற்றும் ஒழுக்கத் தரங்களைப் பூர்த்தி செய்யத் தவறியவர்களுக்கு எதிராக பணிநீக்கம் உட்பட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார்.
சியா மீண்டும் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மைனர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவவிரண்டுமே விதிக்கப்படலாம். மைனரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்கு அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.