ஆரம்பமாக உள்ளது…டி20 உலக கோப்பை தொடர்…

ஆரம்பமாக உள்ளது...டி20 உலக கோப்பை தொடர்...

சென்னை: டி20 உலகக்கோப்பை இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கவிருக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடருக்கு நான்கு அணிகள் மட்டும் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று பிரையான் லாரா கணித்துள்ளார்.

T20 உலகக் கோப்பை தொடரானது ஜூன்2 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பலப்பரீட்சை நடைபெறும்.20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளன.

ஜூன் 26,27 ஆகிய தேதிகளில் அரை இறுதி போட்டியும், ஜூன் 29 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது.

T20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அணியில் ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன்,ரிஷப் பண்ட், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், யுஸ்வேந்தர சஹால், ஹர்ஷதீப் சிங், ஐஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சப்ஸ்ட்டிட்யூட் பட்டியலில் சுப்மன் கில், கலில் அஹமது, ஆவேஷ் கான், ரிங்கு சிங் உள்ளிட்டோர் உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் கொண்ட உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியானது அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று இறுதியில் தோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மனவேதனையில் இருந்தனர். குறிப்பாக ரோஹித் ஷர்மா மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். நீண்ட நாட்களாக தோல்வியில் இருந்து மீண்டு வர முடியாமல் திணறினார்.

உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்குச் செல்லும் என லாரா கணித்துள்ளார். அவர் தனது கணிப்பில் இந்தியா, இங்கிலாந்து ,வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறியுள்ளார். அவரின் இந்த கணிப்பானது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் பேசுகையில், ஆப்கானிஸ்தான் அணியானது பேட்டிங் பௌலிங் என அனைத்திலும் சரிசமமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் முகமது நபி, ரஷித் கான்,குருபாஸ்,நூர் முகமது ஆகியோருக்கு T20 தொடரில் விளையாடிய அனுபவம் உள்ளதால் அவர்கள் சிறப்பாக விளையாடி மற்ற அணிகளை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளதாக கூறினார்.