நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 25 வயது மாணவரான முகமது இசாத் மஸ்லான் என்பவர் கடந்த ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தில் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இவர் 101.59 கிராம் எடை கொண்ட கஞ்சா எனப்படும் போதைப்பொருளை கடத்தியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அவர் போதைப் பொருள் உட்கொள்ளும் சாதனத்தையும் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவர் போதைப்பொருள் உட்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மஸ்லான் மீது போதைப்பொருள் தொடர்பான 8 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இது போன்ற குற்றங்களை புரியும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அவரது வழக்கு இந்த மாதம் 19 ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அவர் மீதான போதைப் பொருள் கடத்தல், உட்கொள்ளுதல் மற்றும் போதைப் பொருள் உட்கொள்ளும் சாதனத்தை வைத்திருந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பல்வேறு தண்டனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும் .