அதிவேகத்தில் வீசிய புயல்!! 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

அதிவேகத்தில் வீசிய புயல்!! 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

வெப்பமண்டல புயல் Ewiniar வார இறுதியில் பிலிப்பைன்ஸைத் தாக்கியது,. குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

மே 28-ஆம் தேதி அன்று, ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.

புயல் மணிலாவின் தெற்கே உள்ள பகுதிகளில் பலத்த காற்றையும் கனமழையையும் கொண்டு வந்தது.

இதனால் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மிசாமிஸ் ஓரியண்டல் மாகாணத்தில், நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் 14 வயது சிறுமி உயிரிழந்தார்.

இதே சம்பவத்தில் மற்றொரு மாணவர் காயமடைந்தார்.

Quezon மாகாணத்தில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயலால் கிட்டத்தட்ட 27,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மார்கோஸ் தெரிவித்துள்ளார்.

புயல் காரணமாக மூன்று விமான நிலையங்கள் மற்றும் ஒன்பது துறைமுகங்களில் சிக்கல் ஏற்பட்டது.

வெப்பமண்டல புயல் Ewiniar 2024 இல் பிலிப்பைன்ஸைத் தாக்கும் முதல் புயல் ஆகும்.

தற்போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்றும், மணிக்கு 160 கிமீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசுயதாக தெரிவிக்கப்பட்டது.