Singapore news

எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்த சிங்கப்பூரர் காணவில்லை!

மே,19-ஆம் தேதி எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்த சிங்கப்பூரர் காணவில்லை. அவரைத் தேடி கண்டுபிடிப்பதற்கு உதவும்மாறு அவருடைய குடும்பத்தார் கோரி இருப்பதாக CNA தெரிவித்தது.

உலகின் மிக உயரமான சிகரத்தை எட்ட கடந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து நேபாளத்திற்கு Shrinivas Sainis Dattatraya எனும் நபர் சென்றதாக chang.org எனும் இணைய தளத்தில் பதிவிடப்பட்டிருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

ஸ்ரீநிவாஸ் சிகரத்தில் ஏறி முடித்து கீழே இறங்கி வரும் பொழுது உடல்நிலை சரியில்லாமல் போனதாக மனுவில் குறிப்பிட்டுள்ளது.

அவர் குழுவில் பிரிந்து 8000 மீட்டர் உயர்த்திலிருந்து கீழே விழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

திபெத்திய மலை பகுதியாக அது இருக்கலாம்.

அவரைத் தேடும் பணிகள் நேற்று காலை தொடங்கியது. இவ்வாறு அவரின் உறவினர் கூறினார்.

ஸ்ரீநிவாஸ் Seven Summit Treks எனும் நேபாள நிறுவனம் ஏற்பாடு செய்த மலையேறும் நடவடிக்கையில் பங்கேற்றதாக BNN செய்தி கூறியது.

அவர் கடைசியாக 8500 மீட்டர் உயரத்தில் இருந்தபோது கீழே உள்ள அதிகாரிகளிடம் தொடர்பில் இருந்துள்ளார்.

மே,19-ஆம் தேதி இரவு 8 மணிக்கு அவருடன் சென்ற வழிகாட்டி முகாமைச் சென்று அடைந்துள்ளார். ஆனால், அவருடன் ஸ்ரீநிவாஸ் இல்லை.

அவரைக் கண்டுபிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதாக உறவினர்கள் கூறினர்.

அவரைத் தேட போதுமான ஆதரவு கிடைத்திருப்பதாக அவரது மனைவி Istagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.