புகார் கிடைத்து மூன்று மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த சிங்கப்பூர் காவல்துறை!!

புகார் கிடைத்து மூன்று மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த சிங்கப்பூர் காவல்துறை!!

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் மார்ச் 23ஆம் தேதி அன்று இரவு நடந்தது.

இந்த விபத்து குறித்து இரவு 10.10 மணியளவில் காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தது.

காரை பின்னோக்கி எடுக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் இடித்ததாக கூறப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நேர்ந்த போது மோட்டார் சைக்கிளில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில் 47 வயதுடைய கார் ஓட்டுநரை அடையாளம் கண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓட்டுநரின் மோசமான இந்த நடத்தை குற்றத்திற்கு
ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் . அல்லது S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் .அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.