சிங்கப்பூர் குடிவரவு சோதனைச் சாவடி ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை சாவடிகளில் வார இறுதி மற்றும் செப்டம்பர் பள்ளி விடுமுறை நாட்களில் நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக கடந்து செல்லும் பயணிகள் அதிக நெரிசலை எதிர் கொள்ள வேண்டி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் விடுமுறை நாட்களில் நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக கடந்து செல்வோர் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர் என்று குடிவரவு மற்றும் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
ஜூன் பள்ளி விடுமுறை நாட்களின் முதல் வாரத்தில் சுமார் 250,000 பேர் சோதனை சாவடிகள் வழியாக கடந்து சென்றதாக கூறியது.நிலச் சோதனை சாவடிகளின் வழியை ஜூன் 16 முதல் 18 வரையிலான தேதிகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 400,000 க்கு அதிகமான பயணிகள் பயன்படுத்தியதாக கூறியது.
போக்குவரத்து நிலவரம் குறித்து போக்குவரத்து ஆணையத்தின் இணையதளங்களில் தெரிந்துகொள்ளும்படி நிலச் சோதனைச் சாவடி வழியாக கடந்து செல்ல திட்டமிடும் பயணிகளிடம் ஆணையம் அறிவுறுத்தியது.