திட்டமிட்ட நேரத்தை விட 5 மணி நேரம் தாமதமாக சென்றடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!

மார்ச் மாதம் 14-ஆம் தேதி (நேற்று) சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று தென்ஆப்பிரிக்காவின் ஜொஹான்னஸ்பர்க் நகரில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் நிறுத்தி வைக்கப்பட்டது.சிங்கப்பூரிலிருந்து SQ478 விமானம் ஜொஹான்னஸ்பர்க் நகர் வழியாக கேப் டவுனிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தது.

பயணம் செய்து கொண்டிருக்கும் போது வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனம் CNA விடம் கூறியது.

OR Tambo விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதன்பின் அதில் இருந்த 58 பயணிகளும்,15 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள்.

விமானம் கூடுதல் பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகு,ஜொஹான்னஸ்பர்க் நகரிலிருந்து புறப்பட்டது.அதன் திட்டமிட்ட நேரத்தை விட 5 மணி நேரம் தாமதமாக கேப் டவுனைச் சென்றடைந்ததாக தெரிவித்தது.