ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

தாய்லாந்தில் நபர் ஒருவர் கருப்பு உளுந்து சுவை கொண்ட ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கியுள்ளார்.

ஐஸ்கிரீமை வாங்கியவருக்கு கவரை பிரித்தவுடன் அதிர்ச்சி காத்திருந்தது.

ஐஸ்கிரீமில் கருப்பு நிறத்தில் ஏதோ இருப்பது போன்று தெரிந்துள்ளது.

ஐஸ்கிரீமில் உளுந்திற்கு பதில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை ராட்சபுரியைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள படத்தில்,முழு பாம்பும் ஐஸ்கிரீமில் உறைந்திருப்பதைக் காணலாம்.

பாம்பு பச்சையாகவும் கருப்பு நிறமாகவும் இருந்தது.

நேற்று முன்தினம் (மார்ச் 4) பகிரப்பட்ட இந்தப் படத்துக்கு 2,200 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது 8,000 க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை கண்டு பலர் அதிர்ச்சியடைந்தனர்.

ஐஸ்கிரீம் உருகினால் பாம்பு எழுந்திருக்குமா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

தாய்லாந்தில் பொதுவாகக் காணப்படும் chrysopelea ornata எனப்படும் பாம்பு இனமாக இருக்கலாம் என்று சிலர் ஊகித்துள்ளனர்.

இது லேசான நச்சுத்தன்மை கொண்டது.