முந்தானை முடிச்சு படமானது தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத படமாகும். படத்தின் கதைக்களம் முதல் அதில் நடித்த நடிகர், நடிகைகள் வரை அனைவரும் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்கள். முக்கியமாக பாக்கியராஜ் மற்றும் ஊர்வசிக்கு அந்த படமானது நல்ல பெயரை பெற்று தந்தது.
மேலும் சொல்லப்போனால் அந்த படத்தில் வந்த முருங்கைக்காய் சீனை இப்பொழுது வரைக்கும் யாரும் மறக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது அந்த படம். கிராமத்திற்கு வாத்தியாராக வரும் பாக்யராஜிற்கும் அவரது இரண்டாவது மனைவியாக வரும் ஊர்வசிக்கும் இடையில் நடக்கும் முக்கிய கதைகளமாக இந்த படம் இருக்கும்.
இந்நிலையில் அந்த படத்தினை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. முந்தானை முடிச்சு படத்தின் படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையத்திற்கு அருகில் இருக்கும் ஓலப்பாளையம் என்ற இடத்தில் புதிதாக வீடு கட்டப்பட்டதாம். சூட்டிங் முடிந்த கடைசி நாள் அந்த வீடானது அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு கொடுக்கப்பட்டதாம்.
இந்த தகவலை தற்பொழுது ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தற்பொழுது ட்ரெண்டாகி வருகின்றது.