அமெரிக்காவில் ஜூன் 20-ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று சரக்கு கப்பலின் மேல் தளத்தில் உடற்பயிற்சி செய்வதற்காக சென்ற Muhhamad Furquan கடலில் விழுந்தார்.
அவர் கப்பல் அதிகாரிக்கான தகுதி பயிற்சியில் கலந்து கொண்டவர்.
அவரைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.
சுமார் 15 மணி நேரத்துக்குமேல் ஹெலிகாப்டர்களும், கப்பல்களும் இணைந்து 200 சதுர கடல்மைல் பரப்பளவில் அவரைத் தேடியது.
கடல் கொந்தளிப்பால் அவரைத் தேடும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த தகவலை அமெரிக்கா கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
கொந்தளிப்பான கடல் நீரும், பலத்த காற்றும் தேடுதல் பணியை சிரமம் ஆக்கியுள்ளதாக தெரிவித்தனர்.