ஜப்பானில் கொளுத்தும் வெயில்!! மக்களுக்கு அறிவுரை!!

ஜப்பானில் கொளுத்தும் வெயில்!! மக்களுக்கு அறிவுரை!!

ஜப்பானில் வெயிலின் தாக்கம் குறைவதற்கான அறிகுறிகள் இல்லை என வானிலை ஆய்வகம் கூறியுள்ளது.

சுமார் 40 டிகிரி செல்சியஸை Kyushu தீவில் பதிவாகியுள்ளதாக கூறியது.

அதனை Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் 35 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வெப்ப சலனம் 37 இடங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.

இரவு முழுவதும் வெப்பம் நீடிப்பதால் இன்று பகலில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் 38 அல்லது 39 டிகிரி செல்சியஸை தொடலாம்.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.