பிரிட்டனை நோக்கி 66 புலம் பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற ரப்பர் படகு ஒன்று பிரெஞ்சு கடற்கரையிலிருuந்து சில மைல் தொலைவில் உள்ள கால்வாயில் எதிர்பாராமல் மூழ்கியது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படகில் இருந்த மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர்கள் கூறினர்.மீட்புப் படையினர் நள்ளிரவு ஒரு மணியளவில் பாதிக்கப்பட்ட படகை சென்றடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கடல் மற்றும் வான் வழியாக தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.