சிங்கப்பூருக்கு ருமேனிய அதிபர் 4 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்!

சிங்கப்பூருக்கு 4 நாள் பயணம் ருமேனிய அதிபர் klaus werner மேற்கொள்ள உள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் Halimah Yacob அழைப்பை ஏற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.இரு நாட்டின் அரசாந்திர உறவின் 55 -ஆம் ஆண்டு நிறவை ஒட்டி அவருடைய வருகை அமைகிறது.

நாளை வரவிற்கிற ருமேனிய அதிபருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும்.

சிங்கப்பூர் வந்தவுடன் அவர் அதிபர் Halima Yacob, சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ஆகியோரைச் சந்திப்பார்.

ருமேனிய அதிபருடன் அவருடைய மனைவி,வெளியுறவு அமைச்சர்,அதிபர் அலுவலக மூத்த அதிகாரிகள் வருகிறார்கள்.

ருமேனிய அதிபரையும்,அவரது மனைவியையும் கௌரவிக்கும் வகையில் ஒரு புதிய ஆர்க்கிட் கலப்பின மலர் வகைக்கு இவர்களுடைய பெயர் சூட்டப்படும்.அதன்பின் அவர்களுக்கு விருந்து உபசரிப்பும் அளிக்கப்படும்.