ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்கொண்ட நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் தோனி ஆடுகளத்தில் சென்னை அணி பேட்டிங் செய்யும்போது சில மாற்றங்கள் நிகழ்ந்ததாக கூறினார்.
ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும்போது பந்து முதலில் அவ்வளவாக பேட்டிற்கு வரவில்லை.
எங்களுடைய இன்னிங்ஸ் இன் நடுவிலே வீரர்கள் பந்தை சிக்சர்களுக்கு அடிக்க மிகவும் சிரமப்பட்டனர்.
அந்த இடத்தில் சிறிய தொய்வு ஏற்பட்டது. ஆனால் ருத்ராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடினார்.
அவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
ருத்ராஜ் தன்னுடைய கிரிக்கெட்டை கவனமாக கையாண்டு வருகிறார். ரன்களை எடுக்க அவர் தேர்ந்தெடுக்கும் ஷாட் பாராட்டத்தக்கும் வகையில் இருந்தது.
நாங்கள் இன்னும் கொஞ்சம் ரன்களை சேர்த்து இருக்க வேண்டும். இந்த இலக்கு போதுமானதாக இல்லை. இளைஞர்கள் அணிக்காக வெற்றியை பெற்று தர முன்வர வேண்டும்.
ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர், நல்ல முறையில் பந்து வீசி வருகிறார். அவர் இன்னும் அதிக போட்டிகளில் விளையாடும் போது, அவருடைய பந்து வீச்சு மேலும் மெருகேறும்.
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சில நோபால்களை வீசினார்கள். நோபால்களை கட்டுப்படுத்த பந்துவீச்சாளர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது அவர்கள் கையில் இருக்கிறது. பந்துவீச்சாளர்கள் போக போக அனுபவத்தை பெற்று நன்றாக பந்து வீசுவார்கள் என நினைக்கிறேன்.
கடந்த சீசனில் முகேஷ் சவுத்ரி நன்றாக விளையாடினார். ஆனால் இப்போது காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை.
இதைப் போன்று துஷ்பாண்டேவும் திறமையான பந்துவீச்சாளர் தான். அவர் தன்னுடைய வேகத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
5 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினாலே போதும் என நினைத்தேன். அணியில் ஜடேஜாவும் மிட்செல் சாண்டனரும், இடது கை சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார்கள்.
இதனால் ஆப் ஸ்பின்னர் தேவையில்லை என நினைத்தேன். இதேபோன்று சிவம் துபேவும் மெதுவாக பந்து வீசக்கூடியவர்.
அவருடைய பங்களிப்பும் இன்று தேவை படாது என முடிவு எடுத்ததால் தான் அவர்களுக்கு நான் பந்து வீச வாய்ப்பு தரவில்லை.
இந்த ஐந்து பந்துவீச்சாளர்களை வைத்து என்னால் திருப்திகரமாக செயல்பட முடிந்தது என்று தோனி கருத்து தெரிவித்துள்ளார்.