நேற்று சிங்கப்பூரில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் ஏலக்குத்தகை நடைபெற்றது.அதில் இதுவரை காணாத அளவு உயர்ந்துள்ளது.குறிப்பாக A,B பிரிவுகளில் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய குத்தகை ஏலத்தில் A பிரிவு வாகனங்களின் உரிமைச் சான்றிதழ் கட்டணம் 88,000 வெள்ளியாக இருந்தது.
92,100 வெள்ளியாக 2013-ஆம் ஆண்டு ஜனவரியில் விலை இருந்தது.
தற்போது 93,503 வெள்ளி வெள்ளியாக உயர்ந்துள்ளது.
தற்போது,ஏலத்தில் B பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 116,201 வெள்ளியாக உயர்ந்துள்ளது.
இதற்குமுன் இந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற குத்தகையில் 115,501 ஆக இருந்தது.
சென்ற மாதம் பொதுப் பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 116,000 வெள்ளியாக இருந்தது.
தற்போது 116,020 வெள்ளியாக கூடியது.வணிக வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் தற்போது 85,389 வெள்ளியாக குறைந்துள்ளது.
இதற்கு முந்தைய ஏலத்தில் 91,101 வெள்ளியாக இருந்தது.
முந்தைய ஏலத்தில் மோட்டார் சைக்கிள் உரிமைச் சான்றிதழ் கட்டணம் 12,390 வெள்ளியாக இருந்தது.
தற்போது 12,001 வெள்ளியாக குறைந்துள்ளது.