சிங்கப்பூரில் வேலையிடங்களில் ஏற்பட்ட விபத்துகளின் போது நிகழ்ந்த மரணங்களின் விகிதம் உயர்வு!!

சிங்கப்பூரில் வேலையிடங்களில் ஏற்பட்ட விபத்துகளின் போது நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை விகிதம் ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் அதிகரித்துள்ளது.

அண்மையில் மனிதவள அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் ஆறு மாதங்களில் 19 மரணங்கள் நேர்ந்துள்ளன.இறப்பு விகிதம் 1.0 ஆக இருந்தது.

அதாவது ஒவ்வொரு 100000 ஊழியர்களில் ஒருவர் உயிரிழக்கிறார்.கடந்த ஆண்டு இறப்பு விகிதம் 0.8 ஆக இருந்தது.

வேலையிடங்களில் ஏற்பட்ட விபத்துகளின் போது நேர்ந்த பெரிய காயங்களின் விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு 100000 ஊழியர்களுக்கும் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 16 ஆக குறைந்துள்ளது

இது கடந்த ஆண்டு 17 க்கும் அதிகமாக பதிவாகி இருந்தது.